Wednesday, January 16, 2019

Objectives


  1. Identify the social gaps among the relentlessly vulnerable communities in Sri Lanka and preside the available resources for their sustainable development over the next thirty years
  2. Capitalize the modern networking facilities through the website, social media and bilateral, multilateral conversations, for a prime platform intended to connect the needs and resources on a voluntary basis in order to provide a better life for all unfortunate men, women, children and elderly and differently abled people in Sri Lanka
  3. Facilitate development with possible modalities including a joint venture by connecting the underprivileged people who are struggling to have a decent and healthy life with the people and the organizations enriched with willingness, human, physical and financial resources and bring our pride back
  4. Develop a sense of self-dependence and self-reliance among the people.
  5. Initiate actions for Gender Mainstreaming, Environmental Conservation, and Community Disaster Risk Reduction 

Thursday, January 10, 2019

உளவூக்க சமூக வலுவூட்டல் அழைப்பு மையம்


Name of the Project:
உளவூக்க சமூக வலுவூட்டல் அழைப்பு மையம் (Psycho-social Call Centre)
Objective:
கிளிநொச்சி மாவட்டத்தில் உளநல நெருக்கீடுகளைக், குறிப்பாக தற்கொலைகள் மற்றும் தற்கொலை முயற்ச்சிகளைக் குறைத்து சமூக வலுவினை மேம்படுத்தல்
Project duration:
ஒரு வருடங்கள்
Planned start date: 01/15/2019                                                  Planned end date: 12/14/2019




Needs Analysis:
எமது சமூகம் நீண்ட கால யுத்தத்தின் பின் மீண்டுவரும் காலகட்டத்தில், பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதில் போரினால் ஏற்பட்ட மன வடுக்கள் மற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கும் அடையாளப் பிரச்சினை, மற்றும் பொருளாதார இழப்பு காணமல் போனோர் தொடர்பான தீர்வின்மை, வீட்டுத்திட்டங்கள் மற்றும் நுண்கடன் திட்டங்களினால் ஏற்ப்பட்ட கடன் சுமைகள், அதிகரித்து வரும் போதைப்பொருட் பாவனை, பலதாரத் திருமணம், இளவயதுக் கர்ப்பம், பாலியல் துஷ்பிரயோகம், வேலைவாய்ப்பின்மை, நடத்தைப்பிறழ்வுகள் என்பவற்றிக்கு முகம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். 



இந்நிலையில்  அண்மைக்காலமாக கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் தற்கொலை செய்பவர்கள், தற்கொலைக்கு முயற்சி மேற்கொள்பவர்களது எண்ணிக்கை உயர்வாகவே காணப்படுவதை அவதானிக்ககூடியதாக உள்ளது. இதில் வயது வேறுபாடின்றி சிறுவர்கள் முதல் வளர்ந்த முதியவர்கள் வரை அடங்குகின்றனர். மாதாந்தம் சராசரியாக 35 நபர்கள் அளவில் தற்கொலை முயற்சி மேற்கொள்வதுடன், 4 - 5 பேர் அளவில் தற்கொலை செய்வதையும் அவதானிக்க முடிகிறது (சுகாதார சேவை உளநலப் பிரிவின் சுயகாயங்கள் மற்றும் தற்கொலை முயற்ச்சிகளுக்கான பதிவேட்டில் இருந்து). தற்பொழுது இப் பிரச்சினையை உரிய முறையில் கையாளக்கூடிய எந்தத் திட்டமும் நடைமுறையில் இல்லை. தற்கொலை முயற்சி மேற்கொள்பவர்களுக்கு உயிரைக் காப்பதற்கான சிகிச்சை மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது. தவிர, அந்நபருக்கு உரிய முறையில் உள ஆற்றுப்படுத்தலோ அல்லது அந்நபரின் குடும்பத்திற்கான விழிப்புணர்வோ, ஆதரவு அளித்தல் போன்ற எந்தவொரு செயற்பாடுகளும் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. பொதுவாகவே ஒருமுறை தற்கொலைக்கு முயற்சி செய்தவர்கள் திரும்பத் திரும்ப முயற்சிப்பதற்கான வாய்ப்புக்கள், உணர்ச்சி வசப்படும் தன்மைகள் அதிகமாகவே காணப்படும். அத்துடன் பிரச்சினைகளுக்கு தீர்வு தற்கொலையே எனும் எண்ணத்தையும் எமது சமூகத்திற்கு மறைமுகமாக உணர்த்திவிடுகின்றது. 



எனவே இத் தொடர்ச்சியான தற்கொலை முயற்சிகளை தகுந்த முறையில் கையாளாவிட்டால் எமது சமூகம் ஆரோக்கியமற்ற சமூகமாகவும், ஆளுமையற்ற சமூகமாகவும் மாற வாய்ப்புள்ளது. வளர்ந்துவரும் இளம் தலைமுறையினரும் இதன் பிடிக்குள் அகப்பட்டு அவர்களின் அடையாளமே அழிந்துவிடும் அபாயம் உள்ளது.
இத்திட்டமானது தனியே தற்கொலை முயற்சி மேற்கொள்பவர்களுக்கான உளவளத்துணை செயற்பாடு மட்டுமன்றி எதிர்வரும் காலங்களில் அவ்வாறான எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான முன்கூட்டிய விழிப்புணர்வுச் செயற்ப்பாடுகளைக் கொண்டதாகவும் , தற்கொலை முயற்சி மேற்கொள்ளக் கூடியவர்களை இனங்கண்டு உடனடியான சேவைகளை பெற்றுக்கொடுக்கக் கூடியதாகவும் இத்திட்டம் அமையும். இதன் மூலம் குறிப்பிட்ட காலத்திற்குள் தற்கொலைகளை குறைப்பதற்கும், பிரச்சினைகளை தகுந்த முறையில் கையாள்வதற்குமான அறிவூட்டல் செயற்பாடுகளின் மூலம் தற்கொலை முயற்சி எடுப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். அதுமட்டுமன்றி தன்னம்ம்பிக்கை நிறைந்த சமூகத்தையும் கட்டியெழுப்ப முடியும். 




Output:
உளவளத்துணை அழைப்பு நிலையம் ஒன்றைக் கட்டமைத்தல்
தற்கொலை எண்ணம் உடையவர்கள் மற்றும் உளவளத்துணை தேவை உடையவர்களை இனங்காணல்
இத்தேவை உடையவர்களைத் தொடர்புகொண்டு உளவளத்துணைச் சேவைகளைப் பெற்றுக்கொடுத்தல் / பெற்றுக்கொடுப்பதற்கான சேவை மையங்களை உருவாக்குதல்
இந்நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பாக பொதுமக்களுக்குச் சென்றடையும் விதமாக விழிப்புணர்வூட்டல்;
  நேரடித் தொடர்பாடல்கள்
   கருத்தரங்குகள், நாடகங்கள், தெருக்கூத்து     
    தொடர்பை ஏற்படுத்தும் பயனாளிகளுக்கு தொடச்சியான உலவலத்துனைச் செயற்பாட்டை வழங்குதல் (கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேசத்திலும் உள்ள ஐந்து வைத்தியசாலைகளில் ஒவ்வொரு உளவளத்துணையாளர்களை நியமித்து அங்கு வரும் பயனாளிகளுக்கு உளவளத்துணை வழங்குதல்)


உளவளத்துணையாளர்களுக்கு குறித்த துணைநாடிகளைத் தொடர்ச்சியாக அனுப்பி வைப்பதற்கும் வீட்டுத்தரிசிப்பை மேற்கொள்வதற்கும் களப்பணியாளர்களை ஈடுபடுத்துதல்
தற்கொலை முயற்சி செய்வோர் மற்றும் அவ்வாறான எண்ணங்களை உடையவர்களையும் ஏனையவர்களையும் உள்ளடக்கி பிரதேச வாரியாக மாதத்தில் நான்கு விழிப்புணர்வு செயற்பாடுகளை மேற்கொள்ளல். ஒவ்வொரு விழிப்புணர்வு செயற்பாடுகளிலும் 50 - 75 பயனாளிகள் பயன்பெறுவர். இது உளவள உதவி தேவைப்படுபவர்களை இனங்காணல் பற்றிய அறிவினை சமூகத்துக்கு வழங்குதலும் அவர்களை ஊக்குவித்தலும் ஆகும். இவ் விழிப்புணர்வுச் செயற்பாடானது;
1. நாடகம்
2. கருத்தமர்வுகள் மூலம், நடாத்தப்படும்
- துணை நாடிகளுக்கு மேலும் சிறந்த உளவளத்துணைச் செயற்பாட்டை வழங்குவதற்காக எமது உளவளத்துணையாளர்களுக்கும் பிரதேச செயலகங்களிலும் ஏனைய சமூக நிறுவனங்களிலும் பணியாற்றும் உளவளத்துணையாளர்களுக்குமான பயிற்ச்சியை வழங்கல் 
-உளவளத்துணை பெறும் பயனாளிகள் முகம் கொடுக்கின்ற பொருளாதார மற்றும் ஏனைய முக்கிய தேவைகளை அவர்கள் பெற்றுக்கொள்ளும் முகமாக அரசசார்பற்ற நிறுவனங்களுடனான வலைப்பின்னல் செயற்பாட்டை ஏற்படுத்தி அதனூடாக பயனாளிகளுக்கான சேவையை பெற்றுக்கொள்ளல்.
- உரிய முறையில் பயனாளிகளுக்கு சேவைகள் சென்றடைவதை உறுதிப்படுத்தவும், குடும்ப அங்கத்தவர்களின் ஆதரவை வலுப்படுத்த தொடர் கண்காணிப்பை மேற்கொள்ளல்.
-நீண்டகால நோக்கில் கிராமமட்டத் தலைவர்களுக்கு தற்கொலை எண்ணமுடையவர்களையும், தற்கொலை முயற்சி செய்தவர்களையும் கையாளுதல் தொடர்பான அடிப்படைத் திறன்களைப் பயிற்றுவித்தல். இது நான்கு கிராமங்களை உள்ளடக்கிய தலைவர்களை இணைத்து அவர்களுக்கான பயிற்ச்சியை வழங்குவதாகும்.
-ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள பாடசாலைகளில் O/L, A/L பரீட்சைக்காகக் காத்திருக்கும் மாணவர்களின் தற்கொலை எண்ணத்தைக் குறைப்பதற்காக சுயமதிப்பு, எதிர்கால இலக்குத் தொடர்பான கருத்தமர்வுகளை மேற்கொள்ளல். இதில் பெற்றோருக்கும் மாணவர்களைப் புரிந்துகொள்ளல், கண்காணித்தல் தொடர்பான பயிற்ச்சிகளை வழங்குதல்.

Outcome:
 



1) முன்கூடியே தற்கொலை முயற்சியுடையவர்களின் தகவல்கள் கிடைக்கப்பெறுவதால். தற்கொலை செய்யும் நபர்களின் எண்ணிக்கை குறைவடைதல்
2) மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும் எண்ணங்கள், சந்தர்ப்பங்கள் இல்லாமல் போகும்.
3) தற்கொலை எண்ணமுடைய நபர்களைப் பாதுகாப்பதற்கான வழிகளும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
4) தொடர்ச்சியான உளவளத்துணை வழிப்படுத்தலினூடாக புரிந்துணர்வும் ஆதரவும் அதிகரிக்கும்
5) தற்கொலை தொடர்பான விழிப்புணர்வை பெறுவதால் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் இடையிலான ஈடுபாடும் பங்களிப்பும் அதிகரிக்கும்.
6) மாணவர்கள் தமது இலக்கை நோக்கி கவனம் செலுத்துவர். சமூக, கலாச்சார விழுமிய செயற்பாடுகளின் தார்ப்பரியத்தைப் புரிந்துகொள்வர்
7) பொருத்தமான வாழ்வாதார செயற்பாடுகளை இனங்காணல் மற்றும் விதந்துரைப்பினூடாக திட்டங்களைச் செயற்படுத்தல்

Project implementation methodologies:
இத் திட்டமானது கிளிநொச்சி மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும். கிளிநொச்சிப் பிராந்திய சுகாதார சேவைகளினது உள சுகாதார நோக்கங்களுக்கும் திட்டங்களுக்கும் பங்களிப்பு செய்யும் நோக்குடன் இத்திட்டமானது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்திலேயுள்ள நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் உள்ள பிரதான வைத்தியசாலைகளில் உளவூக்க நிலையங்கள் அமைக்கப்படும். பூநகரிப் பிரதேசமானது பரந்ததாகக் காணப்படுவதால், பூநகரி மற்றும் முழங்காவில் பிரதேசங்களில் உள்ள பிரதான வைத்தியசாலைகள் இரண்டிலும் உளவூக்க  நிலையங்கள் அமைக்கப்படும். எனவே மொத்தமாக ஐந்து நிலையங்கள் இந்நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் இயங்கும். ஆறாவது நிலையமாக, அழைப்பு நிலையம் (Call Centre) பிராந்திய சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டு, உளவூக்க சேவை வழங்கல் ஒருங்கிணைக்கப்படும். அந்நிலையத்தில் தொலைபேசி வசதி வழங்க்கப்பட்டிருக்கும். உளவூக்கம் தேவைப்படுவோர் (தற்கொலைக்கு முயன்றவர்கள், துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டவர்கள், போதைக்கு அடிமையானவர்கள்) அந்நிலையைத்துக்கு அழைப்பை மேற்கொண்டு உளவூக்க செயற்பாடுகளில்ஈடுபட்டுப் பயன்பெறலாம்.  
அழைப்பு நிலையத்துக்கு ஒருவரும் ஏனைய ஐந்து நிலையங்களுக்கு ஒருவருமாக ஆறு உளவள ஆலோசகர்கள் நியமிக்கப்படுவார்கள். ஐந்து நிலையங்களிலும் உள்ள ஆலோசகர்களுக்கு  உதவியாக ஒரு நிலையத்துக்கு ஒருவராக ஐந்து தொண்டர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இவர்கள் அந்தந்தப் பிரதேசங்களில் உளவூக்கம் தேவைப்படுவோர் அந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ள உதவிபுரிவார்கள்.
இதற்கு மேலதிகமாக நான்கு சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் கிளிநொச்சியிலுள்ள நான்கு பிரதேசங்களிலும் உளவூக்கம் பெற்ற பயனாளிகளினது வாழ்வாதார முன்னேற்றத்துக்கான அடுத்தகட்ட செயல் திட்டத்தை தீட்டுவதற்கும் சரியான செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவற்கும் பயன்படும். 
உளவள ஆலோசகர்கள் தேவையான பயிற்சிகளைப் பெற்றுள்ளார்கள் ஆனால் தொண்டர்களுக்கான பயிற்ச்சிகள் வழங்கப்படும். அத்துடன், கிராமமட்டத்தில் உளவூக்கம் சம்பந்தமாகவும், சமூக வலுவூட்டல் சம்பந்தமாகவும் விழிப்புணர்வு செயற்பாடுகளும் நடாத்தப்படும்.
செயற்திட்டங்கள் யாவும் மாதாந்த மீளாய்வுக் கூட்டங்களில் மதிப்பீட்டுக்குட்படுத்தப்படும். அத்துடன் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் தலைமையிலான மாவட்ட மட்டத்திலுள்ள உளசமூக குழுக்கூட்டங்களிலும்  ஆராயப்பட்டு உரிய செம்மைப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படும்.
Outcome indicators:

Output indicators:
1)  இனங்காணப்பட்ட தற்கொலைக்கு முயன்றோர் மற்றும் தற்கொலை எண்ணமுடையோர் எண்ணிக்கை
2) எத்தனை உளவூக்க நிலையங்கள் அமைக்கப்பட்டன (திட்டமிடப்பட்டவை: நான்கு, அத்துடன் அழைப்பு நிலையம் ஒன்று)
3)   எத்தனை உளவள ஆலோசகர்கள் மற்றும் சமூக வலுவோட்டல் உத்தியோகத்தர்கள் செயற்படுகின்றர்கள் (திட்டமிடப்பட்டவை: பத்து)
4) எத்தனை பயனாளிகளுக்கு மாதாந்தம் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் வழங்கப்பட்டது (திட்டமிட்டது: 50 – 75 பயனாளிகள் / ஒரு கூட்டத்தில்)
5) எத்தனை வீதமான பயனாளிகளுக்கு சமூக சேவை நிறுவனங்களூடாக சேவை பெறுவதற்கு உதவி புரியப்பட்டது
6)  பயனாளிகளுக்குப் பொருத்தமானதாக (>80% திருப்திச் சுட்டெண் கொண்ட) செயற்படுத்தப்பட்ட செயற்றிட்டங்களின் எண்ணிக்கை